
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியுடன் சுதந்திர மக்கள் சபையை சேர்ந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இணைந்துகொண்டுள்ளது.
ஜீ.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா, டிலான் பெரேரா, வசந்தயாப்பா பண்டார உள்ளிட்ட 6 பேர் இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடன் இணைந்துகொண்டுள்ளனர்.
இது தொடர்பான இருதரப்பு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்றது.
கோதாபய ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான இவர்கள், அதன் பின்னர் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் சுயாதீன அணியாக செயற்பட்ட நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியுடன் இணைந்துகொண்டுள்ளனர்.