
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்காக பாராளுமன்றத்தில் யோசனையை கொண்டுவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுடுகின்றது.
கடந்த வாரங்களில் ஜனாதிபதிக்கு கடுமையாக அழுத்தம் கொடுத்து பாராளுமன்றத்தை கலைக்கச் செய்ய இவர்கள் முயன்ற போதும், ஜனாதிபதி இணங்காத காரணத்தால் பாராளுமன்றத்தில் அதற்கான யோசனையை கொண்டுவர திட்டமிடப்பட்டது.
எனினும் பாராளுமன்றத்தில் அதற்கு போதுமான ஆதரவு கிடைக்காத நிலைமை காணப்படுவதால் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் ஜனாதிபதியை சந்தித்து தொடர்ந்தும் வலியுறுத்த பஸில் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் நேற்று வியாழக்கிழமையும் ஜனாதிபதியை பஸில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.