
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக பதவி வகிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவினால் சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவி தொடர்பில் தாக்கல் செய்திருந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 18 ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தினால் இந்த தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.