
ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்க வருமாறு வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வடமாகாண மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பை விடுத்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களுடன் இணைந்து புதிய மாற்றத்திற்கு வரலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.