
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மே மாத தொடக்கத்தில் வெளியிட எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விடைத்தாள் திருத்தும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதன்படி அடுத்த சில வாரங்களில் அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.