பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2016ஆம் ஆண்டில் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாடொன்றில் கூரகல விகாரை தொடர்பில் வெளியிட்ட கருத்து மூலம் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லுறவுக்கு பாதிப்பை ஏற்படுத்த முயன்றதாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கிலேயே அவருக்கு இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.