
இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை குறைக்க தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய கொள்கைச் சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதன்படி, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) 8.50 சதவீதமாகவும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) 9.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த கொள்கை வட்டி வீதம் 50 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கமைய அனைத்து நிதி நிறுவனங்களும் சந்தைக் கடன் வட்டி வீதங்களை குறைக்க விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை நாணயக் கொள்கை சபை வலியுறுத்தியுள்ளது.