ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை உண்மையில் நடத்தியவர்கள் தொடர்பில் தனக்குத் தெரியும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் ஊடகங்களை சந்தித்து கூறியிருந்த நிலையிலையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.