File Photo
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் இரு கட்சிகளுக்கும் முன்னெடுக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையே இது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்தத் தேர்தல்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவையும் சஜித் பிரேமதாசவையும் ஒன்றிணைத்து பிரிந்துள்ள கட்சியை ஒன்றிணைக்க இரு தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்படி முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால் ஜனாதிபதி ரணில் – பிரதமர் சஜித் என்ற வகையில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இல்லாவிட்டால் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால் ஜனாதிபதி சஜித் – பிரதமர் ரணில் என்று பிரசாரங்களை முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையே இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதற்காக இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்வதற்காக இரு கட்சிகளுக்குள்ளும் சிரேஷ்ட உறுப்பினர்களிடையே ஆரயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.