January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது தனக்குத் தெரியும் என்கிறார் மைத்திரி!

2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலை உண்மையிலேயே நடத்தியவர்கள் யார் என்பதனை தான் அறிவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை அது தொடர்பில் நீதிமன்றம் கோரினால் அந்தத் தகவலை வெளியிடத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் ஊடகங்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

”ஈஸ்டர் தாக்குதலை உண்மையிலேயே நடத்தியவர்கள் யார் என்பதனை இதுவரையில் எவரும் கூறியதில்லை. யார் அதனை செய்தார்கள் என்பது எனக்கு தெரியும். நீதிமன்றத்தினால் எனக்கு இது தொடர்பில் கூறுமாறு கோரிக்கை விடுக்கப்படுமாக இருந்தால் அதனை கூற நான் தயார். அந்தத் தகவல்களை இரகசிமாக வைத்திருக்க வேண்டியாது நீதிபதிகளின் கடமையாகும்” என தெரிவித்துள்ளார்.