December 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டவிரோத துப்பாக்கி குறித்து தகவல் வழங்கினால் பணப்பரிசு!

திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்கினால் பணப் பரிசு வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ரி56 துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு தேவையான தகவல்களை வழங்கினால் 5 இலட்சம் ரூபா பரிசாக வழங்குவதுடன் மேலும் பல பரிசுகளையும் வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.