பாராளுமன்றத்தைக் கலைத்துக் காபந்து அரசாங்கத்தை அமைத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமான சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெற்றுவருவதாக அறியமுடிகிறது.
பாராளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென மகிந்த ராஜபக்ஷ தரப்பு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் ரணில் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருக்கிறார்.
பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென ராஜபக்ஷ தரப்பு அழுத்தம் கொடுத்திருந்தபோதும் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க விரும்புகிறார்.
ஆனால் ராஜபக்ஷ தரப்பு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருவதால் அவர்களுடான தொடர்பை தொடர முடியாத இக் கட்டான சூழல் ஏற்படுமாக இருந்தால் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்கும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.