இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று காலை நடைபெற்றது.
”புதியநாட்டை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் சுதந்திர தின நிகழ்வு நடத்தப்பட்டது.
சுதந்திர தினத்திற்காக அரசாங்கம் அதிகளவில் செலவு செய்வதாக பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் பல்வேறு நிகழ்வுகளுடன் சுதந்திர நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது.
வழமைப் போன்று முப்படையினரின் அணிவகுப்பு மரியாதைகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வில் பிரதம விருந்திரனராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொண்டிருந்தார்.
சுதந்திர தின கொண்டாட்டத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 3100க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் சிங்களத்திலும் நிறைவில் தமிழிலும் தேசியக் கீதம் இசைக்கப்பட்டது.