April 11, 2025 4:45:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிதாக அறிமுகமாகும் சொத்து வரி!

இலங்கையில் 2025ஆம் ஆண்டளவில் சொத்து வரியை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இது நேரடியாக அறவிடப்படும் வரியாகவே இருக்கும் என்றும், இதனை பாரியளவில் சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கே அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது நாட்டிலுள்ள வரிகளை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.