February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் மரணம்!

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சனத் நிஷாந்தவின் ஜீப், அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் வாகனத்துடன் மோதி, பின்னர் வீதி பாதுகாப்பு வேலியிலும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வாகன சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து இராஜாங்க அமைச்சரும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த வாகன சாரதி ராகம வைத்தியசாலையில் தீவிர சிகி்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.