May 5, 2025 9:18:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யுக்திய’: 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

இலங்கையில் போதைப்பொருளை ஒழிப்பதற்காக பொலிஸரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘யுக்திய’ நடவடிக்கையின் மூலம் ஒரு மாதத்திற்குள் நாடு முழுவதும் 40,590 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 4,791 மில்லியன் ரூபாவாகும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத சொத்துக்களின் மொத்த பெறுமதி 725 மில்லியன் ரூபாவாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.