February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு சீசீரிவி ஊடாக அபராதம்!

கொழும்பிலுள்ள வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குவிதிகளை மீறும் வாகனங்களை கண்காணிப்பு கமராக்கள் ஊடாக அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 24ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை அடையாளம் கண்டு, அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராத விபரம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வாகன உரிமையாளர் வசிக்கும் பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தின் ஊடாக இந்த அபராத விபரம் வாகன உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.