தமிழ்நாடு மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா இன்று ஆரம்பமானது.
விழாவை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தைப்பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.
அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் போட்டிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன. இன்றைய போட்டியில் 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.