February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகள் ஆரம்பமாகும் தினத்தில் மாற்றம்!

அரச பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 5 ஆம் திகதியே ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 2ஆம் திகதியே தமிழ், சிங்கள பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் இரத்து செய்யப்பட்ட க.பொ.த உயர்தர விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பிரிவு வினாத்தாளை எதிர்வரும் முதலாம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதனால் பாடசாலைகளை மீண்டும் பெப்ரவரி 5ஆம திகதி முதல் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.