February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உச்சம் தொட்ட மரக்கறி விலைகள் – கேட்டால் தலைசுற்றும்!

வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இலங்கையில் மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக கரட் உள்ளிட்ட மரக்கறி வகைகளின் விலைகள் கிலோ ஒன்று 1500 ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அனுராதபுரம் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட சந்தைகளில் கரட் கிலோவென்று 1800 ரூபாவுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கொழும்பு பேலியகொடை மொத்த சந்தையில் ஒருகிலோ கரட் 1850 ரூபாவுக்கும் போஞ்சி 1000 ரூபாவுக்கும் பச்சை மிளகாய் 800 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 500 ரூபாவுக்கு குறைவான விலையில் ஈரப்பலா, வற்றாளை, மரவள்ளி, வட்டக்காய் போன்றவையே விற்பனை செய்யப்படுவதாகவும் மற்றைய மரக்கறிகள் 500 ரூபாவுக்கும் அதிகமாகவே விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.