February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் 13ஆம் திகதி மாலை முதல் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் 13ஆம் திகதி மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த அந்த சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் விநியோகத்தின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.