பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் நிலையில் 109 எனும் துரித இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.