January 28, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் தடுப்பூசி குறித்து வெளியாகும் தகவல்கள் தொடர்பில் சுகாதார தரப்பு விளக்கம்!

கொவிட் பரவல் காலத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளால் சில காலங்களின் பின்னர் பல்வேறு நோய் தாக்கங்களுக்கு உள்ளாக்குவதாக வெளியாகும் தகவல்களை சுகாதார தரப்பு மறுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தலைவர் விசேட வைத்தியர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம பொதுமக்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்படி, பல்வேறு தரப்பினர் இவ்வாறான கருத்துக்களை பகிர்ந்து வருகின்ற போதிலும், விஞ்ஞான ரீதியாக அதனை உறுதிப்படுத்தக்கூடிய உண்மைகள் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தட்டம்மை தடுப்பூசி போடும் தகுதி இல்லாத 9 மாத வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தட்டம்மை நோயாளர்களில் 33 சதவீதமானவர்கள், மூடநம்பிக்கைகள் காரணமாக தட்டம்மை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர் என தொற்றுநோய் வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.