February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வருகிறார் தளபதி விஜய்!

இளையத் தளபதி விஜய், தனது 68வது படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘லியோ’ படத்தின் வெற்றிக்குப் பின்னர், விஜய் தனது 68 படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு இலங்கையிலும் நடைபெறவுள்ள நிலையில், விஜய் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் அதன்போது விஜய் வருவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ‘தளபதி 68’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.