இலங்கையில் கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது அவை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அங்கீகாரம் பெறப்படாத கையடக்க தொலைபேசி வகைகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் எம்.பத்திரன தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் தாங்கள் கொள்வனவு செய்ய விரும்பும் கையடக்க தொலைபேசியில் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் அங்கீகாரம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க IMEI எண்ணைச் சரிபார்க்க வேண்டும். தொலைபேசியின் முகப் பெட்டியின் அட்டையில் IMEI எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இல்லாவிட்டால் பெட்டியின் அடியில் குறிப்பிடப்பட்டிருக்கும் 15 இலக்கங்களை 1909 என்ற இலக்கத்துக்கு அனுப்புவன் மூலமும் IMEI இலக்கத்தை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொலைபேசிகளை கொள்வனவு செய்வதன் ஊடாக தேவையில்லாத. பிரச்சினைகளில் சிக்குவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்று எம்.பத்திரன வேண்டுகோள் விடுத்துள்ளார். .