May 5, 2025 9:07:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம்

இலங்கையில் சிறுவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவு  தெரிவித்துள்ளது.

இதனால் சிறுவர்களை சன நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஜி.விஜேசூரிய அறிவுறுத்தியுள்ளார்.

இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணியுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.