தமிழ் அரசியல் கட்சிகளின் இணப்பாட்டுடன் அழைப்பு விடுக்கப்படுமாயின் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடத் தயார் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தனியாக ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை நிறுத்துவதற்கு பதிலாக பொது வேட்பாளரை நிறுத்துவது மிக சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியான தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றால், தானே அதற்கு பொருத்தமானவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற பெரிய ஆசை தனக்கு கிடையாது. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறும் வாய்ப்பு குறைவாக இருப்பதால், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் கூடுதலான நன்மையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.