April 28, 2025 15:06:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜபக்‌ஷ அணியின் ஜனாதிபதி வேட்பாளர் இவரா?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நான்கு பேரின் பெயர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெயர்களில் பாராளுமன்ற உறுப்பினரான பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேராவின் பெயரும் உள்ளடங்குவதாக சகார காரியவசம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதுவரையில் யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பது தொடர்பில் கட்சி இறுதி முடிவெடுக்கவில்லை என்றும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் போது யார் அவர் என்பது தொடர்பில் அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் சாகர காரியவசம் இதனை குறிப்பிட்டுள்ளார்.