முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று மாலை இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது கட்சியின் முக்கிய தீர்மானங்கள் தொடர்பிலும் கட்சி மறுசீரமைப்பு பணிகள் தொடர்பிலும் மகிந்த ராஜபக்ஷ முக்கிய அறிவித்தலொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த மாநாட்டுக்காக கொழும்புக்கு வெளிமாவட்டங்களில் இருந்து கட்சி ஆதரவாளர்கள் அழைத்து வரப்படும் நிலையில், அவர்களை அழைத்து வருவதற்காக தனியார் பஸ்கள் பலவற்றின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.