எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் சுதந்திர மக்கள் சபை, கூட்டணி அமைத்தால் தமது ஆட்சி அமையும் போது பிரதமர் பதவியை ஜீ.எல். பீரிஸுக்கு வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் இருந்து இது தொடர்பில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு சுதந்திர மக்கள் சபையை சேர்ந்த நாலக கொடஹேவா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் இது தொடர்பில் இரு தரப்பிலும் இறுதி நிலைப்பாடுகள் எட்டப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் சுதந்திர மக்கள் சபையில் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும், தற்போதைய நிலைமையில் பதவி நிலைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது என்று கூறியுள்ளதாக அரசியல் தகலவ்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சுதந்திர மக்கள் சபையை கலைத்து புதிய பெயரில் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் அந்தக் கட்சியை சேர்ந்த சிலர் திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.