
2024 ஜனவரி முதல் பெறுமதி சேர் (வட்) வரி அதிகரிக்கப்படவுள்ளதால் பஸ் கட்டணங்களையும் அதிகரிக்க நேரிடும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் இலத்திரனியல் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட் பல்வேறு பொருட்களுக்கான பெறுமதி சேர் வரி 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.
இவ்வாறான நிலைமையிலேயே பஸ் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வரி அதிகரிப்பால் குறிப்பிட்ட பொருட்களின் விலைகள் உயருமாக இருந்தால் மீண்டும் பஸ் கட்டணத்தை உயர்த்தும் போக்கு உள்ளது. இதுபற்றி ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம் என்று கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.