
இலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படலாம் என்று இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின் விநியோக பாதையில் உடனடியான சீரமைப்பை மேற்கொள்வது உள்ளிட்ட சில பரிந்துரைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
இதன்படி பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால், மின் தடை ஏற்படும் என அந்த சங்கத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மின்னல் தாக்கம் காரணமாக நாடளாவியரீதியில் மின் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.