
பொலன்னறுவை வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை இரவு கைதிகள் பலர் தப்பிச் சென்றுள்ளனர்.
150க்கும் மேற்பட்ட கைதிகள் இவ்வாறாக தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களில் 120 பேர் வரையிலானோர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தப்பிச் சென்றுள்ள ஏனைய கைதிகளை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களின் போது கைதிகள் இவ்வாறு தப்பியோடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.