
நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பில் மின்சார அமைச்சும், இலங்கை மின்சார சபையும் இணைந்து இருவேறு விசாரணைகளை முன்னெடுப்பதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விசேட உரையாற்றவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மின்வெட்டுக்கு பின்னால் சதித் திட்டம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க விசேட அறிக்கையொன்றை வெளியிடத் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.