
இலங்கை முழுவதும் நேற்று இரவு ஏற்பட்ட மின்சார தடைக்கு கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்பில் மின்னல் தாக்கியமையே காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 5.15 அளவில் திடீரென நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் ழுழுநாடும் இருளில் மூழ்கியது. பின்னர் இரவு 11.30 அளவிலேயே மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியது.
மின்சாரம் தடைப்பட்டதால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபட்டதுடன், நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.