
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மலையக தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்வது தொடர்பான ஆலோசகராகவே இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடிவேல் சுரேஷ், அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதால் அவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து அண்மையில் அந்தக் கட்சி நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.