February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புயல் எச்சரிக்கை: இலங்கைக்கு பாதிப்பா?

Raining Common Image

தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 330 கிலோ மீற்றர் தொலைவில் வடகிழக்கே நிலைகொண்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இது 4ஆம் திகதியளவில் இந்தியாவின் வட தமிழக கடற்கரை வரையை நகர்ந்து, பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து 5ஆம் திகதி தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இந்த புயலின் தாக்கம் இலங்கையில் இருக்கலாம் என்றும், இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அந்த பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுது.

மேலும் சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பட்டுள்ளது.