
நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகளின் கீழ் காணப்படும் பாடசாலைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் காணப்படும் பாடசாலைகளுக்காக இவ்வாறு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பாடசாலை தவணையின் போது ஆட்சேர்ப்பு நடவடிக்கையை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.