February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியாகின!

2022 க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

www.ugc.ac.lk என்ற இணையத்தள முகவரியில் வெட்டுப் புள்ளிகளை பார்வையிட முடியும்.

இதேவேளை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு அவர்களின் பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறி குறித்து இன்று குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

2022இல் உயர்தரப் பரீட்சைக்கு 274,304 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதுடன் 166,967 பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தனர்.

எனினும் பல்கலைக்கழக அனுமதிக்கு 84,176 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் இருந்து இந்த வருடம் 45,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

வெட்டுப்புள்ளிகள்