
கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று சென்றிருந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மத போதனை கூட்டமொன்றில் ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் ஜெரோம் பெர்னாண்டோ மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், இவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்ததார்.
நேற்று முன்தினம் இவர் நாடு திரும்பியதை தொடர்ந்து சீஐடியினர் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.