2022 ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி இம்முறை 13,588 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதத்தில் நடைபெற்ற இந்தப் பரீட்சையில் 394,450 பாடசாலை பரீட்சார்த்திகளும், 78,103 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 472,553 பேர் தோற்றியிருந்தனனர்.
இவர்களில் 72.07 வீதமானவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.