
இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் கட்டட நிர்மாணத்துறையில் வேலைவாய்ப்புகள் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய மொழிப் புலமை மற்றும் விடயம் தொடர்பான பரீட்சையில் சித்தியடைவோர் இந்த வேலைவாய்ப்புகளுக்கு உள்வாங்கப்படுவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் முதலாம் திகதி முதல் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.