
டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை மறுசீரமைப்புக்கமைய டீசல் லீட்டர் ஒன்றின் விலை 27 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போதைய நிலைமையில் தங்களால் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்தமுறை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.