
டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 346 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 426 ரூபாவாகும்.
ஒட்டோ டீசல் 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 329 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 434 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 247 ரூபாவாகும்.