
2022 ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அனைத்துப் பாடசாலை பரீட்சார்த்திகள் அச்சிடப்பட்ட பெறுபேறு சான்றிதழ், குறித்த அதிபர்களுக்கும் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபேறு சான்றிதழ் பரீட்சார்த்திகளுக்கும் மீள் மதிப்பீட்டுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.