
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று மாலை இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அமைச்சுப் பதவிகளை வகித்த ரொஷான் ரணசிங்க, இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.