
விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் அவருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுப்பிய கடிதம் தனக்கு கிடைத்துள்ளதாக ரொஷான் ரணசிங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் செயற்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையிலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.