January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவித்தல்!

2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கான வேலைத்திட்டங்கள் அடுத்த வருட ஆரம்பத்தில் இருந்து முன்னெடுக்கப்படும் என்று அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்ககப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த வருடத்தில் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடக்கும் என்று வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.