கிரிக்கெட் போட்டியில் 9.4 ஓவர்களில் ஓட்டங்கள் எதனையும் விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்களை வீழ்த்தி கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவன் சாதனை புரிந்துள்ளார்.
5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் செல்வசேகரன் ரிஷியுதனே இவ்வாறு சாதணை புரிந்துள்ளார்.
13 வயதிற்குட்பட்ட பாடசாலை அணியில் விளையாடும் ரிஷியுதன், பாடசாலைகளுக்கு இடையிலான இரண்டாம் தர கிரிக்கெட் தொடரில் பத்தரமுல்லை எம்.டி.எச் ஜயவர்தன பாடசாலை அணிக்கு எதிரான போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி சாதனை புரிந்துள்ளார்.
போட்டியில் 9.4 ஓவர்களில் பந்துவீசிய அவர் ஓட்டங்கள் எதனையும் விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்களை வீழ்த்தி போட்டியின் நாயகனாகவும் தெரிவாகியுள்ளார்.
முல்லேரியா எதிரிவீர சரத்சந்த்ர மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணி 42.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
எனினும் ஜயவர்தன பாடசாலை அணி 28.4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. அதற்கமைய, ஓர் இன்னிங்ஸால் பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணி முன்னிலை பெற்றது.