
2022ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் இறுதியில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட போதும், தொழில்நுட்ப விடயங்கள் உள்ளிட்ட நடைமுறை ரீதியாக நிலவுகின்ற சிரமங்களால் முடிவுகள் வெளியாவது இன்னும் தாமதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிலவேளை பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகலாம் என்றும், எனினும் அதற்கு முன்னர் வெளியிடுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.